ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரைக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் குணசேகரன் (வயது22). இவர் வாடகை ஆட்டோ ஓட்டிவந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் குணசேகரன் உடல் சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ராமேசுவரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் சிதறிய உடல் பாகங்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று அதிகாலை மண்டபம் சென்ற சேது எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களில் ஏதேனும் ஒரு ரெயில் மோதி குணசேகரன் இறந்திருக்கலாம். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here