ஆவடி ; செப், 13 – நேற்று அண்ணனூர் இரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள டாஸ் மாக் கடையின் முன்பு 25 க்கும் மேற்பட்ட சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பெண்கள் உட்பட்டோர் மது அருந்த வரும் குடி மகன்களை குடி கெடுக்கும் மகன்களே வா என்ற கோஷம் முழங்க கையில் ஆராத்தி தட்டுடன் நின்று அரசின் கவனத்திற்கு இப் பிரச்சனையை ஈர்ப்பதற்காகவும், குடியால் குடி அழிந்து வரும் நிலை ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை வழியுறுத்தியும், தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி தலைமையில் சட்ட ஆலோசகர் கவிதா ஆவடி நகர தலைவர் சௌந்தர்யா மற்றும் பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை திருமுல்லை வாயில் சரக காவல்துறையினர் அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு வழியுறுத்தியும் கலைந்து செல்ல மறுத்த சுமார் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போரட்டக்காரர்களில் 6 பெண்கள் 2 ஆண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இப் போராட்டம் குறித்து சங்கத்தலைவி கூறுகையில் ஏற்கனவே இந்த கடைகளை அகற்றக்கோரி குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த மதுக்கடைகளை அகற்றக்கோரி நீதிமன்றம் வரை சென்று எங்களுக்கு நீதி கிடைக்காததால் இப் போராட்டம் நடைப் பெற்றது என்றார்.
மேலும் அவர் கூறுகையில்
நாட்டில் சமூக குற்றங்கள் பெருகி பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக திகழ்வது மதுயெனும் அரக்கன்தான், குடியின் கேடால் குடும்பம் முதல் கடைக்கோடி தெருவரை தினம் தினம் இன்னல் படும் இல்லத்தரசி முதல் தெருகடந்து பள்ளி, பணிக்கென செல்லும் பெண்கள் வரை தீரா துன்பத்தால் பாலியல் வன்கொடுமை, குடும்ப பொருளாதார பிரச்சினையினால் மாண்டுப் போகும் நிகழ்வுகள் வேடிக்கையாக நடந்தேறிக் கொண்டேயிருக்கிறது. இதனை அரசின் கவனத்தை ஈர்ப்பதாற்காகவே மாதர்களாய் ஒன்றிணைந்து சுதேசி மாதர் பாதுகாப்பு சங்கம் வாயிலாக பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுருத்தல் நிலவும் இடங்களில் அமைந்திருந்தல், மற்றும் போக்குவரத்துக்கும் பள்ளி மற்றும் வழிப்பாட்டு ஆலையங்கள் சார்ந்த இடங்களுக்கு அச்சமின்றி சுதந்திரமாக போய் வர தடைகளான இடங்களில் செயல்படும் மதுபான கடைகளை மூடிட வழியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் அரசின் கவனத்தை ஈர்ப்பாதற்காகவும், குடித்து போதையில் தன் குடியை மறக்கும் குடிமகன்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குடிக்கு எதிரான போராட்ங்களை தினந்தோறும் ஒரு வகையில் அறிமுகப் படுத்தி செயல் பட்டு வரும் வகையில் இன்று ஆராத்திப் போராட்டம் நடத்தினோம் என்றார். சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவி
செய்தி ஆவடி ராஜன்