மயிலாடுதுறை, மார்ச். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து வருவதாகவும், மேலும் அதனை தடுக்க வக்கற்ற தி.மு.க.விடியா அரசை கண்டிப்பதாக தெரிவித்து மாவட்டம் முழவதும் அ.தி.மு.க. சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் பகுதிகளில், தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து வருவதாகவும், மேலும் அதனை கட்டுபடுத்த தவறிய தி.மு.க.விடியா அரசை கண்டிப்பதாகதெரிவித்து .அ.தி.மு.க.சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு மணல்மேடு பகுதியில் அ.தி.மு.க.வடக்கு ஒன்றிய செயலாளர் இராதாகிருஷ்ணன் exM.L.A தலைமையில் 200க்கு மேற்பட்டவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துக் கொண்டு, தி.மு.க அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

மேலும், மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ex MLA. தலைமையில் 500க்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்துக் கொண்டு. தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் போதை வஸ்துகளை தடுக்க வக்கில்லாத விடியா தி.மு.க. அரசை கண்டிப்பதாக அவர்கள் முழக்கமிட்டனர்.

அது போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மனிதசங்கிலியில் கலந்துகொண்ட அ.தி.முகவினர், திமு.க.அரசை எதிர்த்து முழக்கமிட்டும், தி.மு.க அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டையை அவர்கள் அணிந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here