சென்னை, செப். 29-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைப்பெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாமாகவும், சுதந்திரமாகவும் நடைப் பெற்றிடவும் தேர்தல் நடத்தை விதிகளின் படி பொதுயிடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள், வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவ்வறிவிப்பில் எந்த ஒரு அரசு அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் (சுவரில்) எழுத்துக்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது அல்லது வேறு விதங்களில் உருக்குலைக்கும் வகையில் கட் அவட்டுகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் வைப்பதற்கு அனுமதிக்க கூடாது.எனவும் மேலும் தமிழ்நாடு திறந்தவெளிகள் உருக்குலைப்புத் தடுப்பு சட்டம் 1959 இல் குறிப்பிட்டதில் உள்ளபடி பார்வையில் படும் பொது இடங்கள் என்பது, ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் போது ஒரு நபரின் பார்வையில் படும் தனியார் இடம் கட்டிடங்கள் அதுவாகும். எனவே இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதி, மற்றும் சம்மதம் பெறப்பட்டிருந்தாலும் சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது. என அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.