ராமநாதபுரம், அக்.11 –
தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் தன்னலமற்று மக்கள் சேவை செய்த த.மு.மு.க., தன்னார்வலர்களை பாராட்டி த.மு.மு.க., மாநில தலைமைக்கு மகாத்மா விருது வழங்கப்பட்டது. மாநில துணை பொதுச்செயலர் மதுரை கவுஸ்சிடம் மகாத்மா விருது கொடுத்து கவுரவபடுத்தியது. கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை மதுரை மாவட்ட நிர்வாகிகள், வழக்கரிஞர் ஜிப்ரி உடன் இருந்தனர். மேலும் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கற்கை நன்றே ஒருங்கினைப்பாளரில் ஒருவரும் வழக்கறிஞர் ஜிஃப்ரிக்கு மகாத்மா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களின் உடல்களை அவரவர்கள் மதவழக்கப்படி நல்லடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இரமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரிக்கு
மகாத்மா விருது வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,நிஜாமுதீன்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
இந் நிகழ்வில் கற்கை நன்றே நிறுவனர் முகமது இஸ்மாயில், ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் ஜிப்ரி மற்றும் இனியவன், கற்கை நன்றே தன்னார்வலர்கள் முகிலன்,பச்சையப்பன், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.