கும்பகோணம், ஜன. 29 –

 கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால்  சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலில், வரதராஜன், அறிவிற்கரசு, விமல், ஆண்டாள் மற்றும் முருகன் ஆகிய ஐந்து குடும்பத்தினர் இந்த வாய்க்காலை  ஆக்கிரமிப்பு செய்தும் தங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதியில்லாமல் பாலம் அமைத்து வழிப்பதை கட்டியதாகவும் புகார் எழுந்து இது குறித்து ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் அவற்றை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பை மீட்கும் பணியில் அதிரடியாக ஈடுப்பட்டு அப்பாசன வாய்க்காலை மீட்டார்.

  கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், ஆகியோர் முன்னிலையில் பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் உதவியோடு, தூர்க்கப்பட்டிருந்த வாய்க்காலை மீண்டும் தூர்வாரியும், ஆக்கிரமித்த இடங்களை மீட்டு, அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த  பெரிய பாலங்களையும் பொக்லைன் இயந்திர உதவியோடு முழுமையாக இடித்து அகற்றினர்,

   அப்போது சம்மந்தப்பட்ட ஐந்து குடும்பத்தினரும், பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், தான் பாமகவை சேர்ந்தவன் என்றும் எனது உறவினர் தவமணி அதிமுக முன்னாள் எம்எல்ஏ  என்பதாலும் தற்போது உள்ள திமுக எம்பி ராமலிங்கம் தூண்டுதலின் பேரில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று விமல் தெரிவித்தார்.

   மேலும், ஆக்கிரமிப்பு அகற்ற வந்த கோட்டாசியர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் நீதிமன்ற உத்தரவுபடி, தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here