பொன்னேரி, மே. 29 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், என்.எஸ்.நகரில் வசிக்கும் வினாயகம், எழிலரசி தம்பதியர்களின் மகள் வி.ஜெனித்தா இன்பரசி என்கிற மாணவி, 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வில் 600 – க்கு 595 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்ட அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றதை பாராட்டும் வகையில் அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி நினைவு பரிசை வழங்கினார்.
இக்கூட்டத்திற்கு பின்பு, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் சபாநாயகரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான செ.கு.தமிழரசன் பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவரை அழைக்காமல் புறக்கணித்து அவமானப்படுத்தியது இந்தியாவில் உள்ள 40 கோடி ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தியது போலாகும் எனவும்,
மேலும் இப்புறக்கணிப்பு என்பது, அரசியல் சட்டத்திறக்கு புறம்பானது எனவும் பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது மதசாற்பு நிலையாகும் அசோக ஸ்தூபியை மறைக்கவும், இந்திய வரலாற்றில் இருந்து எடுக்கவும் புதியதாக செங்கோல் வைப்பது பௌத்த அறநெறிக்கு எதிரானதாகும். ஆகவே, எதிர்கட்சிகளின் புறக்கணிப்பு நியாயமானதே என்று கூறினார். மேலும் தொடக்கக்கல்வி வர்த்தகமானதற்கு அரசாங்கமே காரணம் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


















