மீஞ்சூர், மே. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள நந்தியம்பாக்கம் கிராமத்தில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் முருகன் கோவில் தெருவில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜி.மகேஸ்வரி தலைமையில் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட பொதுச் செயலாளர் எம். பி.நரேஷ் கட்சியினை இப்பகுதியில் பலப்படுத்த வேண்டும்.எனவும், அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து நிர்வாகிகள் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும், மேலும் இவ்வொன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாஜக கட்சி கொடி ஏற்றி வைத்தும், புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை அமைத்து கூடுதலான உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும்,
மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அக்கட்சி பணியில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும், இளைஞர்களை ஊக்கப்படுத்தியும், வாழ்த்தியும் உரை நிகழ்த்தினார்.
மேலும் இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் நந்தன், மாவட்டத் துணைத் தலைவர் செல்வி, பாராளுமன்ற பொறுப்பாளர் விஜயரங்கன், பொன்னேரி தொகுதி முழு நேர ஊழியர் கோவிந்தசாமி, ஒன்றிய பொது செயலாளர் விமல் குமார், லோகநாதன், கிளை அணி பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் திரளானவர்கள் பங்கேற்றனர்.


















