மீஞ்சூர், ஏப். 27 –

தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள  புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி  பணி ஓய்வு பெறும் ராகிலா பானுக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா  நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் பிஈஒ ராஜ்குமார் மற்றும் முனிராஜ்சேகர் ஆகியோர் கலந்துக் கொண்டு நினைவுப் பரிசு வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து அவருடன் பணியாற்றிய ஆசிரியர்கள், மற்றும் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட  திரளானவர்கள்   கலந்துக் கொண்டு அவருக்கு வாழ்த்துகளையும் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்கள்.

அப்போது ,அவர் ஆற்றிய சிறப்பான பணிகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம்  சூட்டினார்கள். மேலும்  ஆசிரியை ராகிலா பானுக்கு பொன்னாடை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் ஆசிரியை ராகிலா பானு ஏற்புரை நிகழ்த்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here