பொன்னேரி, டிச. 07 –

கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 48 மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வெள்ள நிவராண நலவுதவிகளை முன்னாள் பொன்னேரி அதிமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிறுணியம் பலராமன் வழங்கினார்.

கடந்த டிசம்பர் 03 ஆம் தேதி மாலை முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தில் பெய்த பெருத்த கனமழையால் அம்மாவட்டங்கள் முழுமையாக வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் ஒருப் பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் வாழும் குடியிருப்பு வாசிகள் கடுமையாக வெள்ளப் பாதிப்புகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பொன்னேரி வட்டார பொதுமக்களை திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி வெள்ள நிவராண உதவிகளை வழங்கினார்,

பொன்னேரி நகராட்சியிலிருந்து தொடங்கிய சிறுணியம் பலராமன் வெள்ளத்தாத்தால் பதிக்கப்பட்ட ஆரணி, ஏ ரெட்டிபாளையம், பிரளையம்பாக்கம், பழவேற்காடு, ஆண்டார் மடம் மற்றும் வஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும், கோட்டை குப்பம், வைரங்குப்பம், தோனிஇரவு, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து, அம்மக்களுக்கு வெள்ள நிவராண உதவிகளை வழங்கினார். அவருடன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகேஷ், மாவட்ட இணை செயலாளர் சுமித்ரா குமார், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here