ஆதி திரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்  கடந்த 23 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கத்தில் நடைப்பெற்றது.

சென்னை, ஜூலை 25-

சென்னை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைப்பெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுத்தப்படும் திட்டங்கள்  குறித்த மண்டல அளவிலான கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன் ஆணையர் மதுமதி தாட்கோ மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன் சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் விஜயராணி பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ராகுல் காவல்துறை கூடுதல் இயக்குனர் ( சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ) ஜெயராமன் காவல் துறை துணைத்தலைவர் விஜயலட்சுமி , தாட்கோ பொது மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 9  பயனாளிகளுக்கு ரூ.67.10 இலட்சம் மதிப்பிலான சரக்கு வாகனம் ,ஆட்டோ, மற்றும்  புகைப்பட கருவிகள் வழங்கப்பட்டன . மேலும் 2019-2020 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சிப்பெற்ற பள்ளியின் ஆசிரியர்களுக்கு தலா ரூ.5000 வீதம் 45 ஆசிரியர்களுக்கு ரூ. 2.25 இலட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் ரூ.1.15 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டா 121 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூ. 14.50 இலட்சம் மதிபீட்டிலான நடமாடும் மீன் உணவகம் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது,  ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் கள ஆய்வுகளை மேற் கொண்டு நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெறும் வகையில் பணியாற்றிட வேண்டுமென முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்கள் பள்ளி இடை நிற்றலை கண்காணித்து தொடர்ந்து அவர்கள் கல்விக் கற்றலை உறுதி செய்ய வேண்டும்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப் பணிகள் கொரோனா காலத்தில் சரிவர நடைப்பெறவில்லை என்பது இந்த ஆய்வுக் கூட்டத்தின் மூலம் தெரிய வருகிறது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால், பணிகளை விரைவுப் படுத்துமாறு  அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பேசினார். இதனை தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அடுத்த ஆய்வுக்கூட்டத்தின் போது பணிகளை சரிவர மேற்கொள்ளாத  அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமென தெரிவித்து பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here