ராசிபுரம், மார்ச். 27 –
ராசிபுரம் அருகேயுள்ள நவணி சின்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்க கிளைத் தலைவர் வி.பாஸ்கர் தலைமை வகித்தார். செயலர் கே.ராஜா முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர் எஸ்.மணிவேல், ஏஐடியூசி கட்டிடதொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.என்.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று கொடியேற்றி, சங்க பெயர் பலகை திறந்து வைத்துப் பேசினர்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கே.அன்புமணி, சாலையோர வியாபார தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.மணிமாறன், சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் பி.ஆர்.செங்கோட்டுவேல், நாமக்கல் மாவட்ட சைசிங் தொழிலாளர் சங்க செயலர் ஆர்.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
























