திருவாரூர், மே. 12 –

திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூன்று இரு சக்கர வாகனங்களில் நான்கு பேர் கொண்ட கும்பல் ரூ.6 கோடி மதிப்பிலான ஐந்தரைக் கிலோக் கொண்ட திமிங்கலம் எச்சத்தை கடத்தி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து வனத்துறை அலுவலர்கள் திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றி, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

திருவாரூர் கொரடாச்சேரி சாலையில் அம்மையப்பன் பகுதியில் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு, வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு நபர்கள் வனத்துறை அலுவலர்களைக் கண்டதும், இருசக்கர வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓட  முயன்றுவுள்ளனர்.

அப்போது வனத்துறை அலுவலர் அறிவொளி மற்றும் அவரது குழுவினர் தப்பி ஓட முயன்றவர்களை பிடிக்க முயன்ற போது, அக்கடத்தலில் ஈடுப்பட்ட பிரதீப் ராஜ்குமார் என்பவர் மட்டும் அங்கிருந்து தப்பிவோடி விட்டார். மற்ற மூவர்களான சுரேஷ், வேல்முருகன் பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரும் வனத்துறை அலுவலர்களிடம் பிடிபட்டனர்.

தொடர்ந்து, பிடிபட்ட இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்த பொழுது  அதில் அவர்கள் கடத்தி வந்த  ஐந்தரை கிலோ எடையுள்ள ஆறு கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் இருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிடிபட்ட சுரேஷ் வேல்முருகன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை அங்கிருந்து திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அம் மூவரிடமும்  தீவிர விசாரணையை மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி மேற் கொண்டு வருகின்றார்.

மேலும் அக்கடத்தில் ஈடுப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரதீப் ராஜ்குமார் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த திமிங்கலம் எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது. அதை யாரிடம் விற்க அவர்கள் முயற்சித்தார்கள் என்பது குறித்த விவரங்கள் தப்பிவோடி தலைமறைவாக உள்ள பிரதீப் ராஜ்குமாரை கைது செய்தப்பின்தான் மேலும் உண்மை தெரியவரும் என திருவாரூர் மாவட்ட வனத்துறை காவல் அலுவலர் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட மூன்று நபரையும் நீதிமன்றத்தில் மாவட்ட வனத்துறை காவலர்கள் ஆஜர் படுத்த உள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here