திருவொற்றியூர், மார்ச். 27 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69 வது பிறந்தநாள் விழா மணலி சின்ன மாத்தூர் 19 வட்ட திமுக வினர் சார்பில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை ஏளிய நடுத்தர மக்களுக்கு அறுசுவை கொண்ட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டவர்கள் உணவினை பெற்று பலனடைந்தார்கள்.
மணலி சின்ன மாத்தூர் 19 வது வட்ட கழகத்தின் சார்பாக சின்ன மாத்தூர் பகுதியில் திமுக வட்டச் செயலாளர் மாத்தூர் K. தாமரைச்செல்வன் தலைமையில், பகுதி செயலாளர் N. பரந்தாமன், மாமன்ற உறுப்பினர் K. காசிநாதன் M.C, மாவட்ட பிரதிநிதி மஞ்சம்பாக்கம் ஆர். பாபு ஆகியோர் முன்னிலையில்,
திமுகவின் பகுதி பிரதிநிதி சின்ன மாத்தூர் குகன்,N. ரகுவரன், பில்டர் துரை ஆகியோரின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் S.சுதர்சனம் MABL MLA கலந்து கொண்டு திமுக கட்சிக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கினார்.
நிகழ்ச்சியில் திமுக வட்டம், பகுதி, நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், அப்பகுதி திமுகவின் மூத்த முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.






















