மயிலாடுதுறை, மே. 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சந்திரசேகர்…

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம்  ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அவ்விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த கருங்குயில் நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பூர்ணாம்பாள் புஷ்கலாம்பாள் சமேத  ஶ்ரீ அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

அதனை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய நீர் கடங்களில் வைக்கப்பட்டு யாகசாலை வேள்விகள் நடைபெற்றது.

நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து மேளதாளங்கள் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here