ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் ராமநாதபுரம் கிளையில் 73வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் துாத்துக்குடி மாவட்ட கரூவல கண்காணிப்பாளர் கனிமுருகன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். கனிமுருகன் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் காந்தியின் சுதந்திர தொண்டுகள் பற்றியும் அவரது எளிமையான பழக்க வழக்கங்கள் குறித்தும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசினார். கோவில்பட்டி பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் சரவணன்,
நீலகிரி மாவட்டம் ஊட்டி டி.எஸ்.பி., ராமசந்திரன், வருவாய்துறை சஞ்சீவ், வி.ஏ.ஓ., சந்தானகருப்பன், பேங்க் ஆப் இந்தியாவின் கிளர்க் அர்ஜூன் உட்பட பலர் பங்கேற்று சுதந்திர தின வாழ்த்துகளையும் தாங்கள் பணியில் சேர்ந்த விதங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமநாதபுரம் கிளை பொறுப்பாளர் ராஜேஷ்குமார் சிறப்பாக செய்திருந்தார். விழாவில் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிலும் மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here