காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் சாமினா இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரகடம், செப் . 7 –
ஒரகடத்தில் மருந்து உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றது. 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இதில் பணிபுரியும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சங்கத்தை அங்கிகரிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தொழிற்சாலை நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறை ஆணையமும் பேச்சு வார்த்தை நடத்தாமல் மெத்தனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.




















