தஞ்சாவூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்திஇயாளர் சாரு…
திமுகவிடம் பணபலம், அதிகார பலம் இருப்பதால் அவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள்.எனவே பொதுமக்கள் தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களிக்க வேண்டும் என தஞ்சையில் பிரேமலதா தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவனேசனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் பரப்பரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், இங்கு போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்கள் மீது அதிக வழக்குகள் இருப்பதாகவும், ஆனால் சிவனேசன் நல்ல வேட்பாளர் எனவே அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
மேலும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுமக்கள் வாக்குச் சாவடிக்கு விரைந்து சென்று வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் திமுகவிற்கு ஆட்கள் பலம், அதிகார பலம், பணபலம் இருப்பதால் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள். எனவே பொதுமக்கள் அன்று விரைந்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.




















