இராமநாதபுரம்ந நவ.13-

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில்

மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் உள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சிறு சேமிப்புத்துறையின் சார்பாக மாவட்ட ஆட்சிதலைவர் உலக சிக்கன நாளை முன்னிட்டு பள்ளிமாணவ,மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட ஆட்சியரின் சேர்முக உதவியாளர் ( சிறுசேமிப்பு ) வீரப்பன் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி ஆகியோர் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here