ஊரக பகுதிகளில் பொது மக்களிடம் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய மின்னணு நூலகம்
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார்

ராமநாதபுரம், அக். 3-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் மத்திய அரசின் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டம் என்ற அடிப்படையில் ஊரக பகுதிகளிலுள்ள பொது மக்களிடையே கணினி மற்றும் இணைய தள பயன்பாடு குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் பி.என்.பணிக்கர் அறக்கட்டளையுடன் ஒருங்கிணைந்து மின்னணு நூலகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
பாரத பிரதமர் உத்தரவின்படி இந்திய அளவில் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 117 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதனடிப்படையில் மத்திய மாநில அரசுகள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் முக்கியத்துவும் வழங்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொது மக்களுக்கு கணிணி மற்றும் இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும். அதன்படி அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தில் ஊரக பகுதிகளில் உள்ள பொது மக்களிடையே கணினி மற்றும் இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பி.என். பணிக்கர் அறக்கட்டளையுடன் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மையத்தில் மின்னணு நுாலகம் துவக்கி வைக்கப்படுகிறது. , என்றார்.
இவ்விழாவில் பி.என்.பணிக்கர் அறக்கட்டளை துணைத்தலைவர் பாலகோபால், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேக், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்
.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here