ராமநாதபுரம், மே 10-

ராமநாதபுரத்தில் ஹோட்டல் ஜூனியர் குப்பண்ணா கிளை திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.

பாரம்பரியம் மூன்று தலைமுறை அனுபவம் உள்ள 59 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தெனன்ந்தியா சிங்கப்பூர் உடபட 49 கிளைகள் கொண்ட ஹோட்டல் ஜூனியர் குப்பண்ணாவின் ராமநாதபுரம் கிளை திறப்பு விழா ராமநாதபுரம் டி.சினிமா வளாகத்தில் நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் தனரத்தினம் ஜெகநாதன், ரோட்டேரியன் தினேஷ்பாபு, டாக்டர் ரம்யா தினேஷ்பாபு, அரவிந்த் ஜெகன், அருணன் ஜெகன் ஆகியோர் வரவேற்றனர். சரியாக காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடந்த விழாவில் ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலை கனகமணி மருத்துவமனை டாக்டர் அரவிந்தராஜ் திறந்து வைத்தார்.

ரோட்டரி முன்னாள் ஆளுனர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா ஓட்டல் ஜூனியர் குப்பண்ணாவின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஜூனியர் குப்பண்ணா நிறுவனம் மேலாண்மை இயக்குனர்கள் மூர்த்தி, ஆறுமுகம், சந்துரு ஆகியோர் பங்கேற்றனர். ரோட்டரி முன்னாள் ஆளுனர் ஆறுமுக பாண்டியன் காபி எக்ஸ்பிரஸ் ஷாப் திறந்து வைத்தார். ரோட்டரி ஆளுனர் தேர்வு டாக்டர் ஷேக் சலீம் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். லயன் முன்னாள் ஆளுனர் ஆடிட்டர் சுந்தராஜன் காபி ஷாப் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மூத்த வக்கீல் நாகராஜன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். விஜயராணி முத்து ராம கிருஷ்ணன், கவுசல்யா ஜெய ராமன், கலை மகள் சுகுமார், கஸ்துாரி ராஜா மணி, சசிகலா வெற்றி வேல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். ஜெகன் தியேட்டர் உரிமை யாளர் ரோட் டேரியன் சுகுமார், வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பஞ்சாப் நேசனல் வங்கி மேலாளர் பிரணன் பிரசன்ன குமார், ராம நாதபுரம் மாவட்ட ஓட்டல் பேக்கரி டீஸ்டால் உரிமை யாளர்கள் சங்கம் நிர்வாகி சோம சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு வந்து சிறப்பு தந்த அனை வருக்கும் ஜூனியர் குப்பண்ணா ராம நாதபுரம் கிளை உரிமை யாளர் தினேஷ் பாபு மரியாதை செய்து நன்றி தெரி வித்தார். மே 14ம் தேதி முதல் வாடிக்கை யாளர்கள் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் உணவை ரசித்து ருசித்து சாப் பிடலாம் என உரிமை யாளர் தினேஷ் பாபு தெரி வித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here