சிக்கல்:
கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிரம ஊராட்சி வளர்ச்சி திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல் சக்தி அபியான் திட்டம், வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் போன்ற பல்வேறு பொருள்கள் குறித்து கிராம பொது மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ஜெயபால் சிறப்பாக செய்திருந்தார். சுகாதார துறை அலுவலர்கள், வி.ஏ.ஓ., அங்கன்வாடி பணியாளர், குழந்தை பாதுகாப்பு குழு, ஊராட்சி பொது மக்கள் திரளாக பங்கேற்றனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம்; மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிக்கல் ஊராட்சியில் கிராம சபை...