ராமநாதபுரம், அக். 15-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி மாயாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார்.

பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் கோமாரி நோயானது கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு கால்நடை வளர்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பையும் ஏற்படுத்துகிறது. இந் நோயினால் கறவை மாடுகளின் பால் உற்பத்திக் குறைவு எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப் பிடிப்பு தடை படுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதன்படி, கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய்களை தடுப்பதற்கான ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை வீதம் இரண்டு சுற்றுகளாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16 சுற்று கோமாரி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 17வது சுற்று தடுப்பூசி முகாமானது அக்.14 முதல் நவ.3ம் தேதி வைர நடைபெறும். இதன் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்தம் 86 ஆயிரத்து 945 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப் படவுள்ளது.  இவ்வாறு கூறினார்.

இந் நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் செங்குட்டுவன், ராமநாதபுரம் தாசில்தார் தமிழ்செல்வி, வட் டார வளர்ச்சி அலுவலர் பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here