ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஆறுதல் தப்பிக் கரைச் சேர்ந்த 2 மீனவர்களுக்கு முதல் உதவி மருத்துவம் மேலும் 2 மீனவர்களை மீட்கும் துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 8-
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவ கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரிடையாக சென்று கடந்த 4ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான பாம்பன் மீனவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகள் குறித்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு எடுத்துரைத்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து ஒரு படகில் ஸ்டீபன், அந்தோணி, வின்சென்ட், சின்தாஸ் ஆகிய 4 மீனவர்கள் கடந்த 4ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அன்றைய தினம் மாலையே கரை திரும்பியிருக்க வேண்டிய மீனவர்கள் எதிர்பாரத விதமாக கரை திரு்பாமல் மாயமாயினர். இதனை யடுத்து மாயமான மீனவர்களை பாதுகாப்பாக மீட்க ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடடிக்கைகளும் முடுக்கி விடப் பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலமாக மீனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சார்ந்த உள்ளூர் மீனவர்கள் 7 குழுக்களாக மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாயமான மீனவர்கள் தொடர்பாக மத்திய அரசின் வாயிலாக இலங்கை அரசிற்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந் நிலையில் மாயமான மீனவர்களில் ஸ்டீபன் மற்றும் அந்தோணி ஆகிய 2 மீனவர்கள் இன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நம்பு தாளை மற்றும் புதுக் கோட்டை மாவட்டத் திலுள்ள ஜகதா பட்டிணம் ஆகிய ஊர்களுக்கு இடைபட்ட கடற் பகுதியில் பாதுகாப்பாக மீட்கப் பட்டு ஜகதா பட்டிணத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளனர். இதனை யடுத்து மீட்க்கப் பட்ட மீனவர்களுக்கு முதலுதவி அளித்திட ஏதுவாக உரிய மருத்துவ வசதிகள் வழங்கிடவும் நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. அதே வேளையில் மீட்கப் பட்ட மீனவர் களிடமிருந்து பெறப் பட்ட தகவல்களின் அடிப்படடையில் மீதமுள்ள 2 மீனவர்களையும் பாது காப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன, என, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் போது மீன் வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் மீனவ சங்கங்களை சார்ந்ந பிரதிநிதிகள் உடனிருந்தனர்.