கும்பகோணம், மார்ச். 27 –
கும்பகோணம் அருகே மேலக்காவேரி தங்கம் நகரை சேர்ந்தவர் முகமது ரஃபிக் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் இவருக்கு ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஹாலிக் (21). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாய் பரக்கத் நிஷா சாப்பிட சொன்னதற்கு கோபப்பட்டு சென்ற சிறுவன், தனது அறையின் உள் சென்று பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாகி வெளியே வராததால் அவரது குடும்பத்தினர் அறையை வெகு நேரமாகி தட்டி உள்ளனர். அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஹாலிக் தூக்கு மாட்டிக் கொண்டது தெரிய வந்தது.
தகவலறிந்து சுவாமிமலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடலை கொடுக்க மறுத்துள்ளனர். நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்பு உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















