இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளன்று மாற்று திறனாளிகள் துறைச் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் காது கேளாத மாற்றுத் திறனாளி பலருக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார்.
இராமநாதபுரம் : ஜூன்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் வாரத்தின் முதல் நாளான திங்கட் கிழமை வழக்கமாக நடைப் பெறும். அதனை ஒட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் தங்கள் குறை குறித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்குவார்கள் .அதன் மீதான துறைச் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் நடவடிக்கைகளை அத்துறைகள் துரிதப்படுத்தி பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப் படுகிறது. இதன் படி மாற்றுத் திறனாளிகள் துறைச் சார்ந்த நடவடிக்கையில் பல்வேறு குறைகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப் பட்டது . அதில் பலருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் காதொலிக் கருவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார் .
மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்கள் கூறும் குறைகளையும் கேட்டறிந்தார் . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி உள்ளார்.