திருவையாறு, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தூய அற்புத அன்னையின் 60 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மரியே வாழ்க என தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேல திருப்பந்துருத்தியில் தூய அற்புத அன்னை ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அது போல இந்தாண்டு கடந்த 26 ஆம் தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் காலை மாலை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
மேலும் அவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருப் பவனி நேற்று அதிகாலை வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக அருட்தந்தை வின்சென்ட் தேருக்கு புனித நீர் தெளித்து ஜபித்து தேரினை தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டு மரியே வாழ்க மரியே வாழ்க என தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.






















