ராமநாதபுரத்தில் மக்கள் தலைவரின் காவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
ராமநாதபுரம் சபா நடேசய்யர் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமை
கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். ஆடிட்டர் லோகநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் என்.பிரேம் சதீஷ்
வரவேற்றார். ரத்த தான அவசியம் குறித்து ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் பேசினார்.
ராமநாதபுரம் அரசு வங்கி பத்துல் ராணி பாத்திமா தலைமையில் ரஜினி ரசிகர்கள் 70 பேரிடம் மருத்துவ பணியாளர்கள் ரத்தம் சேகரித்தனர்.
மக்கள் தலைவரின் காவலர்கள் அலெக்ஸாண்டர், இளையராஜா, சுரேஷ் கண்ணன், சுரேஷ் மேத்தா, ராஜேஷ், முருகன், சரவணன், கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் இம் முகாம் ஏற்பாடுகள் செய்தனர்