ராமநாதபுரம், ஜூன்


ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க ரஜினி மக்கள் மன்றம் மாவட்டம் முழுவதும் இலவச குடிநீர் வழங்கி மக்களின் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. அதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையை கண்ட ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தன்னார்வத்துடன் தங்களது சொந்த நிதியில் ஆங்காங்கே டேங்கர் லாரி, டேங்கர் டிராக்டர் நியமித்து குடிநீர் கிடைக்கும் இடத்தில் குடிநீரை சேமித்து குடிநீர் தட்டுப்பாடு உள்ள அனைத்து கிராமங்களிலும் நேரடியாக சென்று எவ்வித விளம்பரமும் இன்றி வினியோகத்தில் இறங்கி உள்ளனர். அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் வக்கீல் ரஜினி தனது சொந்த செலவில் தாமைரக்குளம். ரெட்டையூரணி பஞ்சாயத்துகளை சேர்ந்த மேல்மண்குண்டு, கீழ மண்குண்டு, கேபி வலசை, வாணியங்குளம், இருட்டூரணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகத்தை துவங்கி வைத்தார். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்தம் குடிநீர் வினியோகத்தை துவங்கி வைத்தார். அவர் துவுக்கி வைக்கும்போதே அவரே நேரடியாக மக்களுக்கு குடிநீரை சிந்தாமல் வீணாக்காமல் வினியோகம் செய்தார். மேலும் இதுகுறித்து விளம்பரம் செய்ய வேண்டாம் எனவும் கடுமையாக கூறினார். சத்தமின்றி ரஜினி மக்கள் மன்றம் குடிநீர் வினியோகத்தை செய்து வருவது மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது.
இந்த குடிநீர் வழங்கும் எளிமையான நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி துணை செயலாளர் கோகிலா, கிராம தலைவர் தனுஷ்கோடி, மாவட்ட வர்த்தக சங்க தலைவர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி செயலாளர் சுப்பு, ராமேஸ்வரம் நகர் செயலாளர் முருகன், இணை செயலாளர் சங்கிலி, குமரன், போகலூர் ஒன்றிய செயலாளர்கள் திருக்குமரன், தமிழ்குமரன், தங்கசாமி உட்பட பலரும் பங்கேற்று தண்ணீர் வினியோகத்தில் ஈடுப் பட்டு வரும் மக்கள் சேவையைப் பாராட்டி அவர்கள் அனைவரையும் ஊர் மக்கள் மனதாகர வாழ்த்தினர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here