கும்பகோணம், மே. 08 –

கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரத்தில் நேற்று திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் திராவிட சிந்தனையாளரும் மொழிப்போர் தியாகியுமான எல்ஜி யின் 88 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நேற்று பட்டீஸ்வரம் கடை வீதியில் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக ஆட்சியின் ஓராண்டுகாலம் சாதனை மற்றும் எல்ஜி 88வது பிறந்தநாள் விழா விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தேர்தல் பணிக்குழு செயலாளர் கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும், கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா கலந்துக் கொண்டு பேசுகையில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்  கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து நேராகத் தலைமைச் செயலகத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு இலவச பஸ் போக்குவரத்து, பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். மேலும், இன்று 5 புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

அதில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரத்தில் சிற்றுண்டி, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புத் திட்டம், டெல்லியை போல தமிழ்நாட்டிலும் பள்ளிகள், 21 மாநகராட்சிகளில், 63 நகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் ஆகிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இப்படி எண்ணற்ற திட்டங்களை ஓராண்டுக்குள் எந்த முதல்வர்களும் செய்யமுடியாத சாதனைகளை செய்திருக்கிறார் என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி மணிவாசகம் புதுபடையூர் செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் செயலாளர்கள் மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here