மணலி, ஏப். 02 –

மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை  பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள மக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கு அவ்வார்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் புதிய  டிரான்ஸ்பார்மர் அமைத்து பல மாதங்களாக மின் கம்பங்கள் வாயிலாக மின் இணைப்பு வயர் பொருத்தப்படாமல் இருந்த நிலையில் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கொடுத்த பல்வேறு புகார் மனு மற்றும் நமது தம்பட்டம் நாளேட்டின் வாயிலாகவும் இன்று அப்பிரச்சினைக் குறித்து சுட்டிக் காட்டியிருந்தோம். அதனைத் தொடர்ந்து இன்று அப்பகுதியில் உள்ள 100 வீடுகளுக்கு தடையில்லா மின் சப்ளை செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டும் .. பலமாதங்களாக, மின் கம்பம் மூலம் வயர் இணைப்பு பணி நடைப்பெறாமல் அலட்சியம் காட்டும் மணலி மண்டலம் மின்சார வாரியம் !

இந்நடவடிக்கையை மேற்கொண்ட மின்வாரிய தலைமை பொறியாளர், செயற்பொறியாளர் , உதவி செயற்பொறியாளர் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முன்னின்று பணியாற்றிய மணலிபுதுநகர் உதவி பொறியாளர், மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் சார்பில் தங்கள் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். மேலும் மின்வாரியத்தின் இந்த உடனடி *நடவடிக்கையால் ஒரு கிராமமே மகிழ்ந்துள்ளது. என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here