கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 –

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி உபகரணங்களை வழங்கும் சிறப்பு மிகு விழா நடைப்பெற்றது.

கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 1982ஆம் ஆண்டு ஒன்றாக படித்த ஐம்பது 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியில் பல்வேறு மாணவர் நலனிற்கான பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் ஒருவரான லட்சுமி தற்போது தோக்கம்மூர் ஊராட்சி எல்.ஆர்.மேடு அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். அதனை அறிந்த சக மாணவர்கள், அப்பள்ளியை தத்தெடுத்து பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை செய்ய  முன் வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஒன்றிணைந்து அப்பள்ளி மாணவர்களுக்கு இரும்பு டேபிள் மற்றும் பெஞ்ச் ஆகியவற்றை ஏற்பாடு செய்தனர். அதனை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்வு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.லட்சுமி தலைமையிலும், வட்டார கல்வி அலுவலர் பி.ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தோக்கம்மூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் து.மணி பங்கேற்று மேற்கண்ட முன்னாள் மாணவர் அமைப்பினரிடம் இருந்து பள்ளிக்கு தேவையான டேபிள், பெஞ்சுகளை பெறறுக் கொண்டார்.

 

இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர் அமைப்பினர் மாணவர்க பல்வேறு அறிவுரைகளை வழங்கி. பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here