மயிலாடுதுறை, மார்ச். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 172 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை 1லட்சத்து 47 ஆயிரத்து 772 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் தர்மபுரி கிருஷ்ணகிரி விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அரவை பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 50ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. சராசரியாக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 10000 முதல் 12000 நெல் மூட்டைகள் வரை தேங்கிக் கிடப்பதால் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நேரடியாக ரயில் மூலம் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் போதிய ரயில் வேகன்கள் கிடைக்காமல் பணிகள் தாமதம் அடைந்து வருகின்றன இதனால் நெல் மூட்டைகள் எடை குறைந்து அதற்கான அபராதத்தை நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் சிஐடிய தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here