மயிலாடுதுறை, மார்ச். 16-

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், கிட்டப்பா அங்காடி அருகில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் லண்டன் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை தாலுக்கா மருத்துவமனையில் இருந்து தற்பொழுது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்ந்த போதிலும் நகர்ப்புறம் மற்றும் கிராமபுறங்களில் இருந்து வரும் ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதுமான மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத நிலை மேலும் மருத்துவ உபகரணங்களும், மருந்து மாத்திரைகளும் பற்றாக்குறையாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவும், 24 மணி நேர பணி மருத்துவர்களும், குழந்தை மருத்துவரும் இல்லாத நிலையில் பொதுமக்களும், தாய்மார்களும் மற்றும் குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தொடர்ந்து அவர்கள் குற்றம் சாட்டுகளை எழுப்பினார்கள்.

மேலும் அந்த அவல நிலையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் சமூக ஆர்வலர்களும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ மனைக்கெதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here