மயிலாடுதுறை, மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாகவும், மேலும் அதற்காக வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். மேலும் அவர்கள் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் அவர்கள் புகர் மனுவினை வழங்கிவுள்ளனர்.
இந்தியாவின் பதினெட்டாவது நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் அதனை முன்னிட்டு ஒன்பது கண்காணிப்பு குழுக்கள் ஒன்பது பறக்கும் படைகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் செல்வதற்கு அரசு வாகனங்கள் இல்லாமல் தனியார் ஒப்பந்த ஊர்திகள் பணியமர்த்தப்படுவது வழக்கமாகும்.
ஆனால் தற்போது பறக்கும் படைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சில அதிகாரிகளின் சொந்த வாகனங்கள் வாடகை கார்கள் போல் கணக்குக் காட்டி உபயோகப் படுத்துவதாகவும், மேலும் அதற்கான டீசல் செலவினம் மற்றும் வாடகை படி ஆகியவற்றை முறை கேடாக பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும், அரசுத்துறை சார்ந்த பயன்பாட்டுக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் ஊர்வலமாக சென்று மனுவளித்துள்ளனர். மேலும் அதுப்போன்ற அதிகாரிகளின் செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரனானச் செயலாகும் என்று அவர்கள் அப்போது கண்டனம் தெரிவித்தனர்.
பேட்டி: பாலமுருகன் தொழிற்சங்க தலைவர்