வத்தலக்குண்டு, டிச. 13 –
இன்று நமது தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வத்தலக்குண்டு பணிமனையை சார்ந்த TN57N2439 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து வத்தலக்குண்டு to பன்றிமலை வழித்தடத்தில் இயங்கி வருகிறது.
இந்த பேருந்தின் முன்பக்க சக்கர டயர் (Tyre) மிகவும் மோசமான நிலையில் அதாவது சாலைப் பிடிப்பிற்கு தகுந்த தன்மையில்லாமல் முழுவதும் தேய்ந்து காணப்படுகிறது. இதில் பயணிக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் பாதுகாப்பற்ற பயணத்தில் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் விபத்துக்களுக்கு யார் பொறுப்பேற்பது என்பது போன்ற பல்வேறு கேள்விகளை அப்பகுதியில் வசிக்கும் சமுக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.
இது குறித்து வத்தலக்குண்டு போக்குவரத்து பணிமனை மேலாளர் மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் ஆய்வு நடத்தி இதற்கான உடனடித் தீர்வை காணவேண்டும் என அவர்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் பணிமனை பொறுப்பு அலுவலர்களுகளையும் வலியுறுத்தி கோரிக்கை வைக்கின்றனர்.