மீஞ்சூர், ஜூலை. 10 –

மீஞ்சூரையடுத்துள்ள பெரிய முல்லைவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் 8 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வெகு விமர்சியாக நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவில் முல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர், கடந்த 3 ஆம் தேதி திங்கட்கிழமையன்று காப்புக் கட்டியும் விரதமிருந்தும் நேற்று பயபக்தியுடன் தீக்குழி இறங்கி அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,பால்குடம் எடுத்தல், உடுக்கை சிலம்பு ,சந்தன காப்பு, அம்மன் அலங்காரம், கூழ் ஊற்றுதல், வடை பொங்கல்  உள்ளிட்ட பல்வேறு வகையான அன்னதானம் வழங்கல் நிகழ்ச்சியுடன், நேற்றிரவு சுமார் 7 மணியளவில் அப்பகுதியில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, அக்கிராமத்தை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் இவ்விழாவினை காண வருகை தந்தனர்.

மேலும் காப்புக்கட்டி அம்மனுக்கு விரதமிருந்த குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பக்தியுடன் தீக்குழியிறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றானர்கள்.

முன்னதாக அவர்கள் அனைவரையும், கிராமத்தின் மண்ணடியில் இருந்து பம்பை உடுக்கை மேலத்துடன் ஊர்வலமாக வலம் வந்து தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு கிராமத்தின் அனைத்து வீதிகள் வழியாக அம்மன் வீதி ஊர்வலமும், தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில்  சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் கிராமத்தில் இருந்தும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர்கள் மற்றும் பெரிய முல்லைவாயல் கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெகுச்சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here