நேற்று நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவ்விழாவை ஏழை ஏளியோரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1008 எண்ணிக்கையிலான 1 அடி விநாயகர் சிலைகளை ஜெய் சிவசேனா வின் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விலையின்றி வீடு தேடி சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.
செங்கல்பட்டு, செப் . 11 –
அதன் ஒரு பகுதியாக, கண்டிகை வேங்கடமங்கலம். பொன்னியம்மன் நகர். பகுதியில் ஜெய் சிவ சேனா வின் பாரதிய மகளிர் சேனா மாநிலத் தலைவி ஆர் செல்வி ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி. கி. இராமசுப்பிரமணி பங்கேற்று வீடு வீடாக சென்று சிலைகளை வழங்கினார். உடன் R. பிரகாஷ். செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் அணி தலைவர் .A.C. சிவநோசன். தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் .K.S .ஏழுமலை. சென்னை கோட்ட பொதுசெயலாளர் .M . P. அருள் முருகன். தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர், இராமலிங்கம் .செங்கல்பட்டு மாவட்ட பொதுச் செயலாளரும் கலந்து கொண்டு அப்பகுதியில் விநாயகர் சிலைகளை வினியோகம் செய்தனர்.
அதைப் போன்று, பொருங்களத்தூர் அன்னை இந்திராநகர் பகுதியில் B. விமல் குமார். தாம்பரம் தொகுதி செயலாளர் ஏற்பாட்டில் அப்பகுதிகளில் .A. S. விஜி. செங்கல்பட்டு மாவட்ட துணை செயலாளர். E. சித்ரா. தாம்பரம் தொகுதி துணை செயலாளர் ஆகியோரும் பங்கேற்று வீடு வீடாக சென்று விநாயகர் சிலைகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து சென்னை 174வது வட்டம். A. C. சிவநேசன் தென்சென்னை மாவட்ட இளைஞர் அணிதலைவர் ஏற்பாட்டில் .A. C .பிரபு .சைதை தொகுதி தலைவர். S. நந்தகுமார் 174 வது வட்ட தலைவர் ஆகியோர் பங்கேற்று வீடு வீடாக சென்று விநாயகர் சிலைகளை வழங்கினார்கள்.