திருவாரூர், செப். 19 –

திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளை அலுவலகத்திற்குள் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்கு அங்குள்ள கிளை மேலாளர் மற்றும் மற்றும் வங்கி ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சாமியாரை இன்று போலீசார் கைது செயதனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள மூலங்குடி பகுதியில் வசித்து வருபவர் திருமலை சாமி என்பவர். மேலும் இவர்  இடி மின்னல் சங்கம் என்கின்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் அந்த நபர் கையில் துப்பாக்கியுடன் சென்று மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளை அலுவலகம் அருகே அவர் அமர்ந்து புகை பிடிக்கும் காட்சி நேரலையில் அவரது முகநூல் பக்கத்தில்  வெளியானது.

மேலும் அதனைத் தொடர்ந்து வங்கியின் உள்ளே துப்பாக்கியுடன் நுழைந்து வங்கி அதிகாரிகளை மிரட்டல் விடுத்ததும் அதில் பதிவாகிவுள்ளது. அந்நிகழ்வுகள் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருடைய மூத்த மகள் காவியா சீனாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருவதாகவும், காவியாவிற்கு கல்வி கடன் கேட்டு மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் விண்ணப்பித்துள்ளார்.

அது தொடர்பாக வங்கி வங்கி மேலாளர் கடன் வழங்க வேண்டும் என்றால் கல்விக்கடனுக்கு பிணையாக சொத்து பத்திரங்களை கேட்டுள்ளனர். அப்போது அந்த சாமியார் படிப்பு முடிந்த பிறகு அந்த பணம் உங்களுக்கு தானே வரப்போகிறது. அதற்கு எதற்கு நான் பிணையாக சொத்து பத்திரம் கொடுக்க வேண்டும் என வாதித்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டிற்கு சென்று  துப்பாக்கியை எடுத்துக் கொண்டு  பேஸ்புக் வலைதளத்தில் நேரலை செய்து கொண்டே வங்கியின் உள்ளே நுழைந்த சாமியார் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காண்பித்து வங்கி அதிகாரியை மிரட்டி உள்ளார்.

தகவல் அறிந்த நன்னிலம் டிஎஸ்பி இலக்கியா ஐந்து காவலர்களுடன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு இருந்த சாமியார் மூலங்குடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சாமியாரின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.

சாமியார்  துப்பாக்கி வைத்துக் கொண்டு வங்கி உள்ளே நுழைந்து வங்கி அதிகாரிகளை மிரட்டும் வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here