காஞ்சிபுரம், ஆக. 28 –

ஓராண்டிற்குகான நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகளை காஞ்சிபுரம் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும்  குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் அறிவுறுத்தலின்படி

பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட காஞ்சிபுரம் தாமல் கிராமத்தை சேர்ந்த  துளசிராமன் (25), மணிமாறன் (29) ஆகியோர் நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் துளசிராமன் மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் சேர்ந்து பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாத்தூர் கிராமம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அன்பு என்பவரின் தாபாவில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் அவரை கத்தியால் காயப்படுத்தி மிரட்டி கல்லாவில் இருந்த 2500 ரூபாய்   பணத்தை திருடி சென்றது சம்மந்தமாக பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்கள்.

எனவே, இவர்கள் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக துளசிராமன் 240 நாட்களும், மணிமாறன் 214 நாட்களும் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர்  உத்தரவிட்டார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here