நாமக்கல், ஜூலை. 22 –
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், பாஜக இளைஞரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை கொல்லிமலை வந்தார். அப்போது, அவர் கொல்லிமலை மலைவாழ் மக்களை சந்தித்து, இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை, மலைவாழ்மக்களோடு இணைந்து அவ் வெற்றியைக் கொண்டாடினார்.
அப்போது இதனை மலைவாழ் மக்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருத வேண்டும் என்று கூறினார் அப்போது அம் மக்களின் அன்பான அழைப்பை ஏற்று, ஒரு மலைவாழ்யினர் வீட்டிற்கு சென்று தரையில் அமர்ந்து பாரம்பரிய உணவான ராகிக்களி மற்றும் கூட்டுக்குழம்பை ருசித்து சாப்பிட்டார்.




















