திருவாரூர், நவ. 27 –
திருவாரூர் நகர திமுக செயலாளர் பிரகாஷ் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக நகர திமுகவினர் கொண்டாடினார்கள்.
திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூரில் இன்று திமுக நகர கழகம் சார்பில் அக்கட்சியின் நகரச்செயலாளர் பிரகாஷ் தலைமையில் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள்ளை வழங்கியும் பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கியும் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் திருவாரூர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நகர பேருந்து நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். அந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் வெடி வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாவல், நெல்லி, கொய்யா உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு பிரகாஷ் வழங்கினார். உடன் திமுக பொதுக்குழு உறுப்பினர் செந்தில், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராஜ் கருணாநிதி, நகர மன்ற உறுப்பினர்கள் வரதராஜன், அசோகன், ராமு உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர்.





















