தஞ்சாவூர், பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

தஞ்சாவூர் மாவட்டம், இந்த மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தப் படியாக அதிகப் படியாக சாகுபடி செய்யப்பட்டு வருவது தென்னை சாகுபடியாகும். மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் தேங்காயை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்ற தென்னை வணிக வளாகம் கடந்த 2011ம் ஆண்டு திமுகவின் ஆட்சிக் காலத்தில் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 5 கோடியே 20 லட்சம் மதிப்பில் எந்திரங்கள் அவ் வணிக வளாகத்திற்குள் பொறுத்தப்பட்டது. ஆனால் எந்திரங்கள் பொறுத்தப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்நிலையில் காணொளி காட்சி மூலம் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதற்கு திமுகவை சேர்ந்த விவசாயிகளே கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திமுக விவசாயி வீரசேனன் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட எந்திரங்கள் நல்ல முறையில் உள்ளதா என ஆய்வு செய்யாமலும், எந்திரங்களின் இயக்கத் திறனை பரிசோதிக்க முன்னோட்டம் எதுவும் பார்க்காமல் அதிகாரிகள் முதல்வரிடம் பொய்யான தகவல் கூறி ஒப்புதல் பெற்று முதலமைச்சரை வைத்து தற்போது திறந்து உள்ளார்கள்.

இது முதலமைச்சருக்கு அவப்பெயர் ஏற்படுத்தக் கூடிய செயல் என குற்றம் சாட்டுகின்றார். மேலும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் எந்திரங்களை பரிசோதனை செய்து முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் தற்போதை எங்கள் கோரிக்கை என்றார்.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒரு குழு அனுப்பினார் அந்த குழுவும் முறையாக ஆய்வு செய்யவில்லை எனவும் அதிகாரிகளின் தவறான தகவலின் பெயரில் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளது முதலமைச்சருக்கு ஒரு கரும்புள்ளி எனவே உடனடியாக முதலமைச்சர் சென்னையில் இருந்து ஒரு குழுவை அனுப்பி வைத்து எந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.  அந்த எந்திரங்கள் செயல்பாட்டிற்கு உகந்ததா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி.வீரசேனன் பட்டுக்கோட்டை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here