தஞ்சாவூர், ஏப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் அவர்களது வீட்டிற்கே நேரடியாக சென்று தபால் வாக்குகள் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

அதன்படி தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 383 பேர் முதியவர்கள். மாற்றுதிறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களிடம் வாக்கு சேகரிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இன்று 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் வாக்கு சேகரித்து வருகின்றனர். இக்குழுவில் மண்டல அலுவலர், மைக்ரோ அப்சர்வர், காவலர் ஒருவர், வீடியோகிராஃபர், அரசியல் ஏஜென்ட்களும் இடம் பெற்றுள்ளனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here