வந்தவாசி, செப் 3 –
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னூர், மீசநல்லூர் கிராமங்களில் நடைபெற்றுவரும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளை கடந்த புதனன்று மத்திய சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த இரு கிராமங்களிலும் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், அங்கு நடைபெற்றுவரும் தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளின் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சபாநாயகம் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.பி.வெங்கடேசன், ந.ராஜன்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.