இராமநவமி பெருவிழாவின் 9 வது நாளான இன்று, கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலின் திருத்தேரோட்டம் நடைப்பெற்றது..
கும்பகோணம், ஏப். 10 -
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் ஆகியவை முன்செல்ல, கேரள ஜெண்டை மேளம் முழங்க, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கோடிக்காவல் திரிபுர சுந்தரி சமேத திருகோடீஸ்வரசுவாமி திருக்கோயில் சித்திரை பிரமோற்சம்..
கும்பகோணம், ஏப். 07 -
கும்பகோணம் அருகாமையுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுக பைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில்...
சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயில் திருத்தேரின் வெள்ளோட்டம் .. ஏராளமானோர் வடம் பிடித்து இழுக்க வீதிகளில் தேர் பவனி...
கும்பகோணம், ஏப். 06 -
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள சித்திரை தேரின் திருப்பணி இரு ஆண்டுகளுக்கு பிறகு, ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று, திருத்தேர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புனிதநீர் நிரப்பிய கடத்தை தேரில் ஸ்தாபித்து,...
ஆடுதுறை : ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகாமையில் உள்ள ஆடுதுறை விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/MDgXNQK14YQ
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாலாட்சி அம்பிகா...
வேப்பத்தூர் அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூரில் உள்ள அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/lfpeE_HhRPY
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம்,...
கொடியேற்றத்துடன் தொடங்கியது … கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணத்தில் இன்று தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
https://youtu.be/NmKGV-XspPc
கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இவ்வாண்டும் இவ்விழா இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன்...
ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் 93 வது ஆண்டு திருநடனத்திருவிழா ..
ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் 93 வது ஆண்டு திருநடனத்திருவிழா: திருநடனத்துடன் தெரு வீதியில் பவனி வந்த காளியம்மன்..
படையிலிட்டு தீபாராதனை காட்டி வழிப்பட்ட பக்தர்கள்..
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93 ஆம் ஆண்டு திருநடனத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது....
கும்பகோணம் : ஸ்ரீசக்கரபாணிசுவாமி விஜயவள்ளி தாயார் திருக்கல்யாண வைபவம் …
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு சக்ரபாணிசுவாமிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/QgyLq3klB2I
கும்பகோணத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றானதும், மகாமக திருவிழா தொடர்புடைய...
தேப்பெருமாநல்லூர் மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் திருக்கோயில் பங்குனி மாத தீமிதி திருவிழா …
கும்பகோணம், மார்ச். 28 -
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பிரசித்தி பெற்ற, மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் திருக்கோயில் பங்குனி மாத தீமிதி திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
https://youtu.be/LdFrllVFZEM
கும்பகோணம்...
கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் பங்குனி பிரமோற்சவ திருத்தேரோட்டம் ..
கும்பகோணம், மார்ச். 28 -
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் திருக்கோயில் கோயில் வேங்கடாசலபதிசுவாமி பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 9ம் நாளான இன்று திருவோணத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர்...

























