ராமநாதபுரம், ஜூன் 2

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்து முஸ்லிம்கள் இணைந்து பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி பெரியபட்டணம் எம்.எம்.ஜி சமூக நல அமைப்பு சார்பாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம் கிராமத்தில் எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு மதசார்பற்ற முறையில் அனைத்து சமுதாயத்தினருக்கும் தேவையான உதவிகளை செய்வதில் முன்மாதிரியாக திகழ்கிறது. குறிப்பாக ஊரில் பொதுப் பிரச்சனை எதுவென்றாலும் உடனடியாக சரிசெய்து கொடுப்பதில் இவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது முஸ்லிம்கள் ரம்ஜானை முன்னிட்டு நோன்பு இருந்து வரும் நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மாபெரும் அனைத்து மத. சாதியினர் பங்கேற்கும் விதமான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடத்தி உள்ளது மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
பெரியபட்டினம் கிராமத்தை சுற்றிலும் உள்ள பெரும்பாலான இந்து மக்கள் பங்கேற்கும் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நோன்பு 25ம் நாள் நிகழ்ச்சியாக மாபெரும் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி பெரியபட்டணம் செய்யதலி அப்பா தர்ஹா திடலில் நடைபெற்றது. இதில் ஊர் ஜமாத்தர்கள் ,ஊர் பெரியோர்கள், ஊர் பொதுமக்கள், ஊர் இளைஞர்கள், ஊர் மாற்றுமத சகோதரர்கள், ஊரை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மாற்றுமத சகோதர்கள் என இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பங்கேற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி சகோதரத்துவத்தை வலியுறுத்தி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர். பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்து மகிழ்ந்தனர்.
பங்கேற்ற அனைவருக்கும் எம்.எம்.ஜி.சமூக நல அமைப்பு நண்பர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் பெரிய பட்டிணம் எம்.எம்.ஜி.சமூக நல அமைப்பு சார்பாக நடத்தப்படும் இப்தார் நிகழ்ச்சி இந்த பகுதியில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. இது மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என பங்கேற்ற மற்ற மதத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here