கும்பகோணம், ஜூலை. 24 –

கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அந்நிகழ்வில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் மின்னொளி கைப்பந்தாட்டம் போட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போட்டியை அரசுத்தலைமைக்கொறடா துவக்கி வைத்தார்.

திருவிடைமருதூர் தாலுகா அம்மாசத்திரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாணவர் அணி மாநில செயலாளர் அரசுத்தலைமைக்கொறடா கோவிசெழியன் தலைமையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து நடைபெற்றது.

இப்போட்டியை மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். இப்போட்டியில் மயிலாடுதுறை திருச்சி காட்டுமன்னார்கோவில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள 20 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 20,020 ரூபாவும், இரண்டாம் பரிசாக 17,017 ரூபாவும், மூன்றாம் பரிசாக 15,015 ரூபாவும் நான்காம் பரிசாக 13,013 ரூபாவும்  தொடர்ந்து சிறந்த ஆட்டக்காரருக்கு சிறந்த ஆல் ரவுண்டர், சிறந்த லிப்ரோ, சிறந்த செட்டர், சிறந்த அணி, சிறந்த சென்டர், சிறந்த பிளாக்கர், ஆகியோருக்கு ரூ. 3003 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

முதலாவது போட்டியாக வலங்கைமான் ஸ்போர்ட்ஸ் கிளப் ற்கும் கஞ்சனூர் என் வி எஸ் கிளப் ற்கும் இடையே இப்போட்டித் தொடங்கி இரவு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட அணியினர் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் துணை மேயர் சு.ப தமிழழகன் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா.திருநாவுக்கரசு திருப்பனந்தாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜி கே எம் ராஜா, சரவணன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் அன்பரசன், வழக்கறிஞர் முத்து உத்திராபதி, தேப்பெருமானூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here