கும்பகோணம், ஜூன். 13 –
இன்று காலை கும்பகோணத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதாளும் மேலும் வைகாசி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிக அளவில் மக்கள் கும்பகோணம் நகரில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. இதன் பகுதியாக கும்பகோணத்தில் மாணவர் சேர்க்கை மற்றும் அதேப் போன்று வைகாசி மாதத்தில் வரும் கடைசி சுபமுகூர்த்தம் தினம் இன்று என்பதால் புதுமனை புகுவிழா மற்றும் நகரில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதில் பங்கேற்பதற்காக பொது மக்கள் கும்பகோணம் நகருக்கு அதிக அளவில் வருகை தந்ததால் கும்பகோணம் நகரில் உள்ள கே கே நீலமேகம் மேம்பாலம் , நால்ரோடு, பாலக்கரை போன்ற பல்வேறு முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைக்குப் பின் வாகனங்கள் சுமார் அரை மணி நேர காத்திருப்பிற்கு பிறகு ஒவ்வொரு பகுதியை கடந்து சென்றனர்.