காஞ்சிபுரம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது.
எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் சுங்குவார்சத்திரம், ஶ்ரீபெரும்புதூர், படப்பை போன்ற பகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீ பெருமந்தூர் முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் கே. பழனி ஆகியோருடன் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நகரின் முக்கிய பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட போது டீ கடைக்கு சென்று பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து டீ மாஸ்டர் இடம் எனக்கு இரட்டை இல்லை சின்னத்தில் வாக்கு செலுத்தி என்னை வெற்றி பெற செய்தால் உங்கள் வீட்டு பிள்ளை போல் ஓடோடி வந்து உங்களுக்கு சேவை செய்வேன் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின் ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் பிரேம்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, வெற்றி பெற்றதோடு சரி தொகுதிக்கு வந்ததில்லை எனவும், மேலும் அவர் மது ஆலையை வைத்து பொதுமக்களை மது குடிக்க வைத்துக் கெடுக்கிறார், ஆனால் மருத்துவரான நான் பொதுமக்களுக்கு மருந்து கொடுத்து காப்பாற்றுவேன் என நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் போது அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், அதிமுக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுகோட்டை சிவகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில்ராஜன், ரேவராட்சாயகனி சுந்தர்ராஜன் , மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர்கள் எறையூர் முனுசாமி, சிங்கிலிபாடி ராமச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கழகச் செயலாளர் போந்தூர் மோகன் ஶ்ரீ பெருமந்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.